ஊழல் புகார்: குவைத் பிரதமர், அரசு ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

குவைத்: ஊழல் புகார் எழுந்ததையடுத்து குவைத் பிரதமர் ஷேக் நாஸர் அல் முகமது அல் சபா தலைமையிலான அரசு தனது பதவியை ராஜினாமா செய்தது.

எண்ணெய் வளமிக்க நாடான குவைத் மன்னர் ஷேக் ஷபா அல் அகமது அல் சபா பரிந்துரையின்படி ஷேக் நாஸர் அல் முகமது அல் சபா கடந்த 2006ம் ஆண்டு பிரதமரானார். அவர் பிரதமராக பொறுப்பேற்ற நாளில் இருந்தே குவைத் அரசியலில் சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.

இந்நிலையில் பிரதமர் நாஸர் அரசு பணத்தை கையாடி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திப்பதாக எதிர்கட்சிகள் புகார் தெரிவித்தன. நேற்று எதிர்கட்சி அமைச்சர்கள் கலந்து கொண்ட பேரணி நடந்தது.

இதையடுத்து பிரச்சனை பெரிதாவதை உணர்ந்த மன்னர் ஷேக் ஷபா உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பிரதமர் நாஸர் தலைமையிலான அரசை ராஜினாமா செய்யும்படி உத்தரவிட்டார்.

மன்னரின் உத்தரவுப்படி நாஸர் தலைமையிலான அரசு ராஜினாமா செய்தது. அவர்களது ராஜினாமாவை மன்னர் ஏற்றுக் கொண்டார். ஆனால் புதிய அரசு பதவியேற்கும் வரையில் நாஸர் பதவியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+