For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஎம் தீவிரவாதிகள் பட்டியலில் சென்னை ரங்கநாதன் தெரு, ரிச்சி தெரு!

By Siva
Google Oneindia Tamil News

Terror
சென்னை: இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் சென்னையில் உள்ள சில முக்கிய இடங்களைத் தகர்க்க திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் அப்துல் ரஹ்மான், முகமது இர்ஷாத் கான்(52) ஆகிய 2 பேரும் சென்னையில் சிக்கினர்.

அப்துல் ரஹ்மான் சேலையூர் சந்தோஷபுரத்தில் தங்கி ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வந்தான். டெல்லியில் இருந்து வந்த அவனுடைய மாமா இர்ஷாத்கான் அவனுடன் தங்கி இருந்தான். இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இம்ரான் என்ற ஆசிப் கடந்த வாரம் சென்னைக்கு வந்து ரஹ்மானுடன் தங்கியுள்ளான். அவர்கள் 3 பேரும் சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ரங்கநாதன் தெரு,ரிச்சி தெரு, பாரி முனை, பர்மா பஜார் உள்ளிட்ட பல இடங்களில் 2 நாட்கள் நோட்டமிட்டுள்ளனர். அதுவும் எந்த நேரத்தில் கூட்டம் அதிகம் உள்ளது. எப்பொழுது குண்டு வைத்தால் உயிர் இழப்பு அதிகம் இருக்கும் என்று நோட்டமிட்டுள்ளனர்.

இம்ரான் அப்துல் ரஹ்மானுக்கு லட்சக் கணக்கில் பணம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இம்ரானுடன் தொடர்புடைய 25 பேர் சென்னையில் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. சென்னையில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு ரகசிய தளம் அமைக்கப் போட்ட சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

ரிச்சி தெருவுக்கு சென்றிருந்தபோது இம்ரான் ஒரு லேப்டாப் வாங்கி அப்துல் ரஹ்மானுக்கு பரிசாகக் கொடுத்துள்ளான். சனிக்கிழமை இம்ரான் ரிச்சி தெருவுக்கு சென்றுள்ளான் மறுநாள் அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டான். இம்ரான் சென்னையில் பதுங்கியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ரிச்சி தெருவில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் கடந்த வாரம் பதிவானவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று சந்தேகப்படும் 100 இடங்களில் சாதாரண உடை அணிந்த போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வரும் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதால் சென்னையைத் தாக்க திட்டமிட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே, சென்னையில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், பெரிய ஹோட்டல்கள், விடுதிகள் உள்பட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆங்காங்கே வாகனச் சோதனையும் நடத்தப்படுகிறது.

English summary
Police have found out that Chennai is on the terror list. Indian Mujahideen operatives Abdul Rahman, Mohammed Irshad Khan were arrested on sunday in the state capital. Police have tightened the security in the city. They have stepped up the vigil as they suspect that some more IM operatives may be hiding in the city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X