ஒபாமாவைவிட அதிக சம்பளம் வாங்கவிருக்கும் ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா

Subscribe to Oneindia Tamil

Julia Gillard
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்டு விரைவில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோரை விட அதிக சம்பளம் வாங்கவிருக்கிறார்.

ஆஸ்திரேலிய எம்.பி.க்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்டின் சம்பளம் விரைவில் 90,000 அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ. 4,702,968 கூடுகிறது. அவர் தற்போது வாங்கும் சம்பளத்துடன் இந்த கூடுதல் தொகையைச் சேர்த்தால் அது அரிக்க அதிபர் பாரக் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோர் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாகும்.

ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகள் கழித்து தற்போது தான் எம்.பி.க்கள் சம்பளம் உயர்த்தப்படவிருக்கிறது. அதன்படி குறைந்த அனுபம் வாய்ந்த எம்.பி.க்களின் சம்பளம் கூட ரூ. 7,315, 728ல் இருந்து ரூ.9,405,936 ஆக உயர்த்தப்படுகிறது என்று கூறப்படுகிறது.

எம்.பி.க்களின் சம்பளம் ரூ. 9,405,936ஐ விட அதிகமாக உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

பட்ஜெட்டில் சலுகைகளை குறைக்கப்பட்டுள்ள நிலையில் எம்.பி.க்களுக்கு சம்பளம் உயர்த்தப்படுமாயின் அது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தும்.

ஜூலியா கில்லர்டுக்கு 160 சதவீத சம்பள உயர்வு கொடுக்கப்படவிருக்கிறது. அதன்படி அவரது புதிய சம்பளம் ரூ.24,559,944 ஆகும்.

அமெரிக்க அதிபர் ஒபாமா சம்பளம் ரூ.20,902,080, இங்கிலாந்து பிரதமரின் சம்பளம் ரூ.11,548,399 ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+