அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பெட்டிகள் வைக்க அமைச்சர் இரா.காமராஜ் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பெட்டிகள் கண்டிப்பாக வைக்க வேண்டும் என்று உணவுத் துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ரேஷன் கடைகளில், நேற்று உணவுத் துறை அமைச்சர் இரா.காமராஜ் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அவருடன் உணவுத் துறை செயலாளர் எம்.பி.நிர்மலா, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளர் பி.எம்.பசீர் அகமது, துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இருந்தனர். ரேஷன் கடைகளில் சோதனையின் போது, பொருட்கள் வாங்க வந்த நுகர்வோரிடம் அமைச்சர் குறைகளை கேட்டறிந்தார்.
அதன்பிறகு அமைச்சர் இரா.காமராஜ் கூறியதாவது,
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பெட்டிகளை வைக்க வேண்டும். ரேஷன் பொருட்கள், ஊழியர்கள் குறித்த புகார்களை நுகர்வோர் தெரிவிக்க வேண்டும்.
நுகர்வோரின் புகார்களை சென்னையில் உணவுத் துறை அமைச்சர் அலுவலக தொலைப்பேசி எண்ணில் 044-25671129 அழைத்து தெரிவிக்கலாம்.
மேலும், உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையாளர் அலுவலகம் 044- 28583222, உணவுத்துறை செயலாளர் அலுவலகம் 044 25672259, உணவு அமைச்சரின் சிறப்பு நேர்முக உதவியாளர் மொபைல் போன் எண் 94445 28617, உணவு அமைச்சரின் கூடுதல் சிறப்பு நேர்முக உதவியாளர் மொபைல் போன் எண் 94444 94642 உள்ளிட்ட எண்ணில் நுகர்வோர் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம், என்றார்.
ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்திய பிறகு அமைச்சர் இரா.காமராஜ், ரேஷன் கடைகளின் புகார் பெட்டிகளில் வரும் நுகர்வோரின் புகார்கள் மீது துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications