முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் முன்ஜாமீன் பெற்றார்
விருதுநகர்: மோசடி வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்வி அறக்கட்டளையில் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல்துறையினர் தன்னை கைது செய்யக்கூடும் என்பதால் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பழனிவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது என்பதால் தனக்கு முன்ஜாமீன் தர வேண்டும் என்று சாத்தூர் ராமச்சந்திரன் கோரினார். இதற்கு அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
2 தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, சாத்தூர் ராமசந்திரனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் ரூ.10,000 சொந்த ஜாமீன், 2 தனி நபர் ஜாமீன் அளிக்க வேண்டும்.
போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications