'கிங்' விஜய் மல்லையாவுக்கு இன்னொரு கெட்ட செய்தி!

சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டத்தை அறிவித்து இதனால் நாடு முழுவதும் வர்த்தகர்களும் எதிர்க் கட்சிகளும் போராட்டத்தில் இறங்க, அந்தத் திட்டத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.
இந் நிலையில் இந்திய விமான சேவை நிறுவனங்களில் 26 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கோரி விஜய் மல்லையா உள்ளிட்ட விமான நிறுவன அதிபர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, அந்தத் திட்டத்துக்கு அனுமதியும் தர முடிவு செய்த மத்திய அரசு, திடீரென அதிலிருந்து பின்வாங்கியுள்ளது.
விமான நிறுவனங்களில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கலாம் என்று மத்திய வரத்தகத்துறை அமைச்சத்தின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுப் பிரிவு மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்திருந்தது.
இந்தப் பரிந்துரையை மத்திய நிதியமைச்சகம் ஏற்பதாக அறிவித்திருந்தது.
ஆனால், திடீரென நேற்றிரவு இந்தத் திட்டத்துக்கும் மத்திய அரசு 'பிரேக்' போட்டுள்ளது. இப்போது இந்தத் திட்டத்துக்கு அனுமதி தந்தால், அது கிங்பிஷருக்காகவே மத்திய அரசு எடுத்த முடிவு என்று வெளியில் பேசுவார்கள் என்பதால், திடீரென தனது முடிவிலிருந்து அரசு பின்வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் இந்திய பங்குச் சந்தை விதிகளின்படி அன்னிய நிறுவனங்கள் இந்திய விமான நிறுவனங்களில் வெறும் 26 சதவீத பங்குகளை மட்டும் வாங்க முடியாது. ஒரு விமான நிறுவனத்தில் 26 சதவீத பங்குகளை வாங்கும் அன்னிய நாட்டு நிறுவனங்கள், மேலும் 26 சதவீத பங்குகளை சந்தையிலிருந்தும் வாங்க வேண்டும்.
இதன்படி, அன்னிய நிறுவனங்கள் வசம் கிட்டத்தட்ட 52 சதவீத பங்குகள் போய்விடும். இன்னும் விளக்கமாக சொன்னால், இந்திய விமான நிறுவனமே அன்னிய நாட்டு முதலீட்டாளர் வசம் போய்விடும்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பலாம். மல்லையாவை காப்பாற்றுவதற்காக நாட்டின் விமான நிறுவனங்களையே அன்னிய நிறுவனங்களிடம் மத்திய அரசு அடகு வைக்கிறது என்ற கெட்ட பெயரும் வரலாம்.
ஏற்கனவே சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நிறுவனங்களின் நேரடி முதலீட்டை அனுமதிப்பதாகக் கூறி சிக்கலில் மாட்டி விழி பிதுங்கி, இப்போது அதிலிருந்து வெளியேறி தப்பியோட முயற்சிக்கும் மத்திய அரசு விமான நிறுவனங்கள் விஷயத்தில், குறிப்பாக ஒரு மல்லையாவுக்காக, கெட்ட பெயர் வாங்கத் தயாராக இல்லை (அட்லீஸ்ட், கொஞ்ச காலத்துக்காகவாவது).
இதனால், விமானத்துறையில் அன்னிய முதலீடு திட்டத்தையும் மத்திய அரசு கிடப்பில் போடவுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, Centre for Asia Pacific Aviation என்ற விமானத்துறை ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில், 2012ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள், அதாவது அடுத்த 3 மாதங்களுக்குள், இந்திய விமான நிறுவனங்களுக்கு ரூ. 12,000 கோடி முதல் ரூ. 15,000 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட பாதி நஷ்டம், ஏர் இந்தியாவுக்கே ஏற்படப் போகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
ரொம்ப கஷ்டம் தான்!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications