பீரங்கியில் பயணித்த முதல் இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பட்டீல்

ராஜஸ்தானில் நேற்று சுதர்சன் சக்தி என்ற ராணுவப் பயிற்சி நடந்தது. இதை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்(76), பாதுகாப்பு அமைச்சர் ஏ. கே. அந்தோணி ஆகியோர் பார்வையி்ட்டனர்.
இந்த பயிற்சியில் சுமார் 50,000 ராணுவத்தினர், டி-90, டி-72 ரக பீரங்கிகள், அர்ஜுன், பைட்டர் ஜெட்டுகள், இந்திய விமானப்படைக்கு சொந்தமான எஸ்யு-30 எம்கேஐ, ஜாக்குவார்ஸ், எம்ஐஜி-27 ரக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஆகியவை கலந்து கொண்டன.
இதைப் பார்வையிட்ட பிரதீபா பாட்டீல் போர்கால உடை அணிந்து டி-90 ரக பீரங்கியை ராணுவ தளபதி வி.கே. சிங்குடன் சேர்ந்து பயணித்தார். இதன் மூலம் பீரங்கியில் பயணித்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் ஏ. கே. அந்தோணியும் ஒரு பீரங்கியில் வந்து இறங்கினார்.
கடந்த 2009ம் ஆண்டு பூனேவில் உள்ள லோஹேகான் விமான தளத்தில் இருந்து பிரதீபா பாட்டீல் சுகாய்-30 எம்கேஐ போர் விமானத்தில் பறந்தார். இந்த விமானத்தில் பறந்த 2 குடியரசுத் தலைவர்கள் அப்துல் கலாம் மற்றும் பிரதீபா பாட்டீல் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications