For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரள வன்முறைக்கு கம்பத்தில் பதிலடி-கேரளத்தவரின் ஜீப், லாரி, திராட்சைத் தோட்டம் தீவைத்து எரிப்பு

Google Oneindia Tamil News

கம்பம்: கேரளாவில் தமிழர்களுக்கு எதிரான கொலை வெறித் தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் தேனி மாவட்டம் கம்பத்தில் கேரளத்தினருக்குச் சொந்தமான லாரி, ஜீப் மற்றும் திராட்சைத் தோட்டம் ஆகியவை தீவைத்துக் கொளுத்தப்பட்டது.

கேரள மாநிலம் குமுளியில் தமிழர்களின் கடைகளை கேரளத்தினர் அடித்து நொறுக்கினர். தமிழர்களையும் ஓட ஓட விரட்டித் தாக்கினர். இந்தத் தகவல் பரவியதும் கம்பம், கூடலூரில் பெரும் பிரளயம் ஏற்பட்டது. குறிப்பாக கம்பத்தில் இளைஞர்கள் பெருமளவில் திரண்டு கேரளத்தினருக்கு எதிராக வன்முறையில் இறங்கினர்.

கம்பம் மெயின்ரோட்டில் உள்ள 2 ஹோட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பல்பொருள் அங்காடி ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டது.

அதேபோல, காமயகவுண்டன்பட்டியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மினி லாரியில் திராட்சை பழங்கள் ஏற்றி செல்வதற்காக வந்தனர். அந்த லாரியை ஒரு கும்பல் தீவைத்து எரித்தது. இதில் லாரியின் முன்குதி எரிந்து சாம்பலானது.

நாராயணத்தேவன்பட்டியில் உள்ள கேரளாவை சேர்ந்தவரின் ஒரு திராட்சை தோட்டத்தை தீவைத்து எரித்தனர். அந்த தோட்டத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஜீப் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீ பிடித்து எரிந்தன. தோட்டத்தில் இருந்த ஜெனரேட்டரும் தீ பிடித்து வெடித்து சிதறியது.

தொடர்ந்து நிலைமை பதட்டமாக உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களை சிறைப் பிடித்து வைத்ததாலும், பெண் தொழிலாளர்களை மானபங்கப்படுத்த கேரளத்தவர் முயன்றதாலும் கூடலூர், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் கேரளத்தவருக்கு எதிராக மக்கள் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர். இதனால்தான் தமிழகத்திலும் வன்முறை வெடித்துள்ளதாக பொதுமக்கள் கூறினர்.

English summary
Keralites's lorry, jeep and grapes garden were torched in Cumbum protestinga against the attack on Tamil Nadu people in Kumuli.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X