கரூரில் சாயப்பட்டறை பாய்லர் வெடித்து 4 கூலித் தொழிலாளர்கள் பலி: 19 பேர் காயம்
கரூர்: கரூரில் சாயப்பட்டறை பாய்லர் வெடித்துச் சிதறியதில் கூலித் தொழிலாளர்கள் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
கரூர் மாவட்டம் டி.செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் லோகநாதன்(48). சொந்தமாக சாயப்பட்டறை நடத்தி வருகிறார். இந்த சாயப்பட்டறையில் நூல் சாயம் ஏற்றிக் கொண்டு இருந்த பாய்லர் நேற்று காலை 11 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில் சாயப்பட்டறையின் மேற்கூரை பெயர்ந்து, பல அடி தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டது. மேலும் சாயப்பட்டறையில் வேலை பார்த்த செல்லாண்டிபாளையம் காந்தி(50), கே.வி.நகரைச் சேர்ந்த பாஸ்கரன்(45), பீகார் மாநிலம் பிஜுவாடாவைச் சேர்ந்த ராம்பீப்(26) உள்ளிட்ட 3 பேர் பலியானார்கள்.
சாயப்பட்டறைக்கு வெளியே 200 அடி தூரத்தில் உள்ள வயலில் பீகாரைச் சேர்ந்த ராஜ்குமார் பிரகாஷ்(34) என்பவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும் இந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட சுமார் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ பரவாமல் தடுத்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000, லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10,000 வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவி்ட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications