முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை:தடுத்து நிறுத்தக் கோரி பாமக இன்று போராட்டம்

Subscribe to Oneindia Tamil

கம்பம்: முல்லை பெரியாறு அணையின் குறுக்கே கேரளா அரசு புதிய அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரி பாமக சார்பில் வரும் 12ம் தேதி கம்பத்தில் நடப்பதாக இருந்த போராட்டம் இன்று கூடலூரில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவி்த்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

முல்லைப் பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி செய்து வருகின்றது. இந்த முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்தக் கோரி பாமக சார்பில் தேனி மாவட்டம் கம்பத்தில் வரும் 12ம் தேதி நடக்கவிருந்த போராட்டம் மாற்றப்பட்டுள்ளது.

அந்த போராட்டம் கூடலூரில் இன்று (7ம் தேதி) மாலை 3 மணிக்கு நடைபெறும். இதில் பாமகவினரும், தமிழ் ஆர்வலர்களும், விவசாயிகளும் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+