ஆரியங்காவில் தமிழக ஐயப்ப பக்தர்களை வரவேற்று உபசரித்த கேரளத்தவர்!

முல்லை பெரியாறு அணை பிரச்சனையினால் வரலாறு காணாத அளவில் தமிழக கேரள மக்களிடையே பிரிவினையை உருவாக்கி வருகிறது. காலம் காலமாக சகோதர்களாக வாழ்கிற நிலை தற்போது பகையாக மாறி வருவது குறித்தும் இரு மாநிலங்களிலும் உள்ள மக்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.
இதுவரை தேனி, குமுளி, வழியாக சபரிமலை சென்ற பக்தர்கள் செங்கோட்டை வழியாக செல்லுவதால் இப்பகுதியில் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
பக்தர்களுக்கு வரவேற்பு
இந்நிலையில் கேரள மக்களின் நல்லெண்ண நடவடிக்கையாக ஆரியங்காவு பஞ்சாயத்து தலைவி ஐயம்மாள், துணை தலைவர் சலீம், மற்றும் அப்பகுதி மக்கள் சபரி்மலை செல்லும் பக்தர்களை வரவேற்று உபசரித்து சபரிமலை பயணம் சிறப்பாக அமைய வாழ்த்தி அனுப்பினர்.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு பூ, சந்தனம், குங்குமம், மற்றும் இனிப்புகள் வழங்கி கனிவோடு வரவேற்று சபரிமலை அனுப்பி வைக்கின்றனர்.
நெகிழ்ச்சியான விருந்து உபசரிப்பு
இந்த நிகழ்ச்சி ஏராளமான பக்தர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது. அத்துடன் ஆரியங்காவு, தென்மலை பகுதியில் தமிழகத்தில் இருந்து சபரி்மலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் பசி போக்க கேரள மக்களால் அன்னதானம் செய்யப்படுகிறது. இதில் கேரள மக்களின் பாரம்பரிய உணவு கப்பை, கஞ்சி வழங்கப்படுவது ஐயப்ப பக்தர்களை கவர்ந்துள்ளது.
ஒரு சிலரால் தமிழக - கேரள உறவு பாதிக்கப்படும் நிலையில் ஆரியங்காவு பகுதி மக்களின் நல்லெண்ண உபசரிப்பு நடவடிக்கை ஐயப்ப பக்தர்களுக்கு மட்டுமின்றி ஏராளமான தமிழக மக்களின் நெஞ்சத்திலும் இடம் பிடித்துள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications