முல்லைப் பெரியாறு விவகாரம்: பிரதமரை சந்திக்கும் அத்வானி

Subscribe to Oneindia Tamil

Advani
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை பாஜக மூத்த தலைவர் அத்வானி சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், தமிழக, கேரள மாநில முதல்வர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு அவர் பிரதமரிடம் வலியுறுத்துவார் என்று தெரிகிறது.

முன்னதாக நேற்று பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய அத்வானி, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசுடன் பேசுமாறு என்னிடம் சில எம்.பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பிரதமருடன் பேசுவேன் என்றார்.

இக் கூட்டத்தில் பேசி. பிகார் மாநில பாஜக எம்பி பல்பீர் புஞ்ச், பாகிஸ்தானிலிருந்து வரும் இந்தியா வரும் அகதிகளை பாகிஸ்தானுக்கே திரும்பிச் செல்லுமாறு குடியேற்றத்துறை அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர் என்றார்.

அதே போல திரிபுரா, மேகாலயம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும் இதே நிலை நிலவுவதாகவும், இந்த மாநிலங்களுக்கு வரும் இந்து மததைத்தைச் சேர்ந்த அகதிகளை மட்டும் வங்கதேசத்துக்குத் திரும்பிச் செல்லுமாறு மத்திய அரசு நிர்பந்திப்பதாகவும் குவஹாத்தி பாஜக எம்பி விஜய் சக்கரவர்த்தி குற்றம் சாட்டினார்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்தும் இன்று பிரதமரிடம் அத்வானி பேசுவார் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+