கரூர்- சேலம் புதிய அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம் துவக்கம்
கரூர்: கரூர்- சேலம் புதிய அகல ரயில் பாதையில் மோகனூர் வரையான சோதனை ஓட்டம் துவங்கியது.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கரூர்- சேலம் இடையே 85 கி.மீ தூரம் புதிய அகல ரயில்பாதைப் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது. சேலம், ராசிபுரம், நாமக்கல், மோகனூர், வாங்கல் வழியாக கரூருக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் திட்ட மதிப்பீடும் மேலும் அதிகரித்தது.
தற்போது ரூ.650 கோடி மதிப்பில் கரூர் - சேலம் புதிய ரயில்வே இருப்பு பாதை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக சேலம் - நாமக்கல் வரை ரயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
தற்போது கரூர் - மோகனூர் இடையே 15 கிலோ மீட்டர் தூரம் இருப்பு பாதை அமைக்கும் பணி முடிவடைந்து, கரூர்- மோகனூர் இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஏற்கனவே சேலம்- நாமக்கல்- மோகனூர் இடையே ரயில்வே பாதை தரம் குறித்த சோதனை ஓட்டம் முடிந்துவிட்டது. தற்போது கரூர் - மோகனூர் இடையே சோதனை ஓட்டம் துவங்கி உள்ளது. இதனால் விரைவில் புதிய ரயில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய வழி்த்தடம் மூலம் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிக அளவில் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications