முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்: தா. வெள்ளையன்
சென்னை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையை கண்டித்து இன்று (9ம் தேதி) சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இரு மாநில மக்களும், இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஏற்ப சகோதரர்களாக வாழ்ந்து வரும் நிலையில் இந்தப் பிரச்சனை சகோதரத்துவத்துக்கு ஊறுவிளைவிப்பதாக உள்ளது.
கேரள மாநில தலைவர்கள் இந்த பிரச்சனையை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதை கைவிட வேண்டும். நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கும் விபரீத விளைவுகளை தடுத்து நிறுத்த மத்திய அரசு தவறிவிட்டது. தற்போதாவது இந்த விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும்.
கேரளாவில் வசிக்கும் தமிழர்களும், சபரிமலைக்கு செல்லும் தமிழர்களும், தமிழகத்தில் இருந்து செல்கின்ற வாகனங்களும் தாக்கப்படுவது ஒவ்வொரு இந்தியனுக்கும் தலைக்குனிவு ஆகும். இது போன்ற முக்கிய பிரச்சனைகளில் பொறுப்பு இல்லாமல் செயல்படும் மத்திய அரசை கண்டித்து 9ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகைக்கு முன்பு பேரவையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்த அறிக்கையி்ல் தெரவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications