இலங்கை தமிழர்களின் வாரிசுகளுக்கு விடுதிகளில் இட ஒதுக்கீடு – ஜெ. உத்தரவு
சென்னை: தமிழக மாணவர்களைப் போன்று முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களின் வாரிசுகளுக்கும் அரசு விடுதியில் இடம் ஒதுக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அரசு மாணவர் விடுதிகளில் இலங்கைத் தமிழ் மாணவர்களுக்காகக் கூடுதலாக 5 சதவீத இடங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 21 ஆயிரம் முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
அவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று வர சிரமப்படுவதை அறிந்த முதல்வர், ஏற்கெனவே செயல்பட்டுவரும் மாணவர் விடுதிகளில் தங்கிப் பயில நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி, தமிழகத்தில் இப்போது இயங்கிவரும் 1,294 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதிகளில், ஒவ்வொரு விடுதியிலும் இப்போது அனுமதித்துள்ள எண்ணிக்கைக்கு கூடுதலாக ஐந்து இடங்கள் வீதம் மொத்தம் 6,470 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்.
இதேபோன்று, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் இயங்கி வரும் 1,238 விடுதிகளில் ஒவ்வொரு விடுதியிலும் இப்போது அனுமதித்துள்ள எண்ணிக்கைக்கு கூடுதலாக 5 இடங்கள் வீதம் மொத்தம் 6,190 இடங்கள் உருவாக்கப்படும்.
இதனால் ஆண்டுக்கு ரூ. 7.40 கோடி அரசுக்குத் தொடர் செலவினம் ஏற்படும். இந்த நடவடிக்கை மூலம், அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களின் 12 ஆயிரத்து 660 குழந்தைகள் அரசு விடுதிகளில் தங்கிப் பயில வழி வகை செய்யப்பட்டுள்ளது என்று அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications