டிசம்பர் 18 ல் சென்னைக்கு அன்னாஹசாரே வருகை – ஊழலுக்கு எதிராக பிரச்சாரம்
சென்னை: ஊழலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சமூக சேவகர் அண்ணா ஹசாரே தனது குழுவினருடன் டிசம்பர் 18-ம் தேதி சென்னைக்கு வர உள்ளனர். அன்றைய தினம் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர்கள் சிறப்பு உரையாற்றுகின்றனர் என இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வதுடன், மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டப் போவதாக ஏற்கெனவே அன்னா ஹசாரே அறிவித்திருந்தார். இதன் ஒருபகுதியாக வரும் 18 ம் தேதி அவர் சென்னை உள்ளார். அவருடன் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அன்னாஹாசாரேவின் குழுவினரும் சென்னை வர உள்ளனர். அன்றையதினம் சென்னையில் அன்னா ஹாசாரே பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் ஹசாரோ, அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்று பேசுகின்றனர். பின்னர் மக்களிடம் வலுவான லோக் பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உள்ளனர்.












Click it and Unblock the Notifications