மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்: 2 பேர் பலி-சுனாமி எச்சரிக்கை இல்லை
மெக்சிகோ சிட்டி: வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 11 வயது சிறுவன் உள்பட இருவர் பலியாகினர்.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் நேற்று இரவு 7.47 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானது. மெக்சிகோ தலைநகரான மெக்சிகோ சிட்டி மற்றும் குரேரோ மாநிலத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மெக்சிகோ சிட்டியின் தென்மேற்கில் இருந்து 166 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் மெக்சிகோ சிட்டியில் வீடுகள் குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது இரவு முழுவதும் தெருக்களில் இருந்தனர். இந்த பயங்கர நிலநடுக்கத்தால் இகுவானா நகரில் 11 வயது சிறுவனும், பாலோபிளான்கோ அருகே ஒருவரும் பலியானதாக அரசு அதிகாரி தெரிவித்தார். இதனால் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நகரம் இருளில் மூழ்கியது.
சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. 6.7 அளவு நிலநடுக்கம் இருந்ததாகத் தெரிவித்த அமெரிக்க புவி ஆய்வு மையம் 30 நிமிடங்களில் நில நடுக்க அளவு 6.5 என்று அறிவித்தது.
மெக்சிகோ அதிபர் பிலிபே கால்டெரான் டுவிட்டரில் கூறியுள்ளதாவது, இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. ஏதாவது சேதம் பற்றி தகவல் கிடைத்தால் எங்களுக்கு தெரிவியுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications