மதுரையில் சி.எஸ்.ஐ. பிஷப் கிறிஸ்டோபர் ஆசிர் மீது பாலியல் புகார்
மதுரை: மதுரை, ராமநாதபுரம் திருமண்டல சி.எஸ்.ஐ. பிஷப் கிறிஸ்டோபர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
மதுரை, ராமநாதபுரம் திருமண்டல சி.எஸ்.ஐ. பிஷபாக இருப்பவர் கிறிஸ்டோப்ர் ஆசிர்.மதுரை புதூர் பிஷப் ஹவுசில் வேலை செய்து வரும் ஜான்சி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ) என்ற பெண் தன்னை பிஷப் ஆசிர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று பரபரப்பான புகார் கொடுத்தார்.
மேலும் தான் அளித்த புகார் மீது போலீசார் மவுனம் காத்து வந்ததால் ஜான்சி பிஷப் ஆசிர் மீது மதுரை உயர் நீதிமன்ற கிளையிலும் வழக்கு தொடர்ந்தார்.
இதனால் பிஷப் கிறிஸ்டோபர் மீது எந்நேரத்திலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யலாம் என தகவல் பரவியது.
இந்த நிலையில், அந்தப் பெண் பிஷப் மீது தவறாக புகார் கொடுப்பதாக கூறி பிஷப்புக்கு ஆதரவாக சில பெண்கள் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications