சிரஞ்சீவி பணத்துக்காக கட்சியையும், எம்.எல்.ஏ.க்களையும் காங்கிரஸுக்கு விற்றுவிட்டார்: ரோஜா தாக்கு
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: நடிகர் சிரஞ்சீவி பணத்திற்கு ஆசைப்பட்டு மக்களின் நம்பிக்கையை குழிதோண்டி புதைத்துவிட்டு தனது கட்சியை காங்கிரஸுக்கு விற்றுவிட்டார் என்று நடிகையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் முன்னணி தலைவருமான ரோஜா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நடிகர் சிரஞ்சீவி அரசியலுக்கு வந்தவுடன் ஆந்திர மக்கள் அவர் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்தார்கள். அவர் ஏழை, நடுத்தர மக்களுக்காக பாடுபடுவார் என்றெல்லாம் கனவு கண்டார்கள். ஆனால் அவர் தன்னை நம்பிய மக்களை ஏமாற்றிவி்ட்டார். பணத்திறக்கு ஆசைப்பட்டு பிரஜா ராஜ்ஜியம் கட்சியையும், அதன் எம்.எல்.ஏ.க்களையும் அவர் காங்கிரஸ் கட்சிக்கு விற்றுவிட்டார். அவர் ஒரு அரசியல் வியாபாரி. அடுத்த தேர்தலில் அவருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்.
நடிகர் சிரஞ்சீவி கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியைத் துவங்கினார். கட்சி துவங்கிய மூன்றாவது ஆண்டில் அதை காங்கிரஸுடன் இணைத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!













Click it and Unblock the Notifications