முல்லைப் பெரியாறு: நான் சொன்னது மாதிரி தான் போராட்டம் வெடித்திருக்கு-வைகோ
சென்னை: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் போக்கால் போராட்டம் வெடிக்கும் என்று தான் கடந்த 10 ஆண்டுகளாக சொன்னது தான் நடந்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை கேரள அரசு கையாளும் விதத்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று நான் கடந்த 10 ஆண்டுகளாக கூறி வந்தது தான் நடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் தற்போது தன்னெழுச்சியான பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழக அரசின் தற்போதைய நிலைப்பாட்டை வரவேற்கிறேன். அதிலும் குறிப்பாக அணை பிரச்சனையில் இரு மாநிலங்களுக்கிடையே மத்திய அரசு ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற தமிழக அரசின் முடிவு பாராட்டுக்குரியது. வரும் 21ம் தேதிதமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்களை மதிமுக சார்பில் தடுத்து நிறுத்தும் போராட்டம் நடைபெறும் என்றார்.
கடந்த 2008ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மதிமுக சார்பில் நடந்த கருத்தரங்கில் வைகோ இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு சென்னை மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு விசாரணை வரும் ஜனவரி மாதம் 2வது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications