முல்லைப் பெரியாறு: கேரள அரசைக் கண்டித்து திமுக மனிதச் சங்கிலி போராட்டம்
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து திமுக சார்பில் இன்று மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து திமுக சார்பில் இன்று மாலை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மதுரையில் திமுக பொதுச் செயலளார் க.அன்பழகன் தலைமையிலும், தேனியில் பொருளாளர் ஸ்டாலின் தலைமையிலும், திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமையிலும், சிவகங்கையில் சற்குண பாண்டியன் தலைமையிலும் போராட்டம் நடந்தது.
க. அன்பழகன் தலைமையில் உசிலம்பட்டி முதல் மதுரை வரை 41 கி.மீ. தூரத்துக்கு மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி தேவர் சிலை தொடங்கி பி.ஆர்.சி டிப்போ வரை உசிலம்பட்டி நகர திமுகவினரும், பி.ஆர்.சி. டிப்போ தொடங்கி தி.விலக்கு வரை சேடபட்டி ஒன்றிய கட்சியினரும், தி.விலக்கு முதல் வாலாந்தூர் கண்மாய் வரை உசிலம்பட்டி ஒன்றியத்தினரும், வாலாந்தூர் கண்மாய் முதல் கருமாத்தூர் வரை செல்லம்பட்டி ஒன்றியத்தினரும் மனிதச் சங்கிலியாக நின்றனர்.
கருமாத்தூர் முதல் புளியங்குளம் வரை கல்லுப்பட்டி, திருமங்கலம் ஒன்றியம், நகரத்தினரும், புளியங்குளம் முதல் காமராஜர் பல்கலைக்கழகம் வரை வாடிப்பட்டி ஒன்றியம், பேரூர், அலங்காநல்லூர், பாலமேடு, சோழவந்தான் ஒன்றியத்தினரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தொடங்கி ரிங்ரோடு வரை திருப்பரங்குன்றம் ஒன்றியம், நகரம், ஹார்விப்பட்டி, திருநகர், அவனியாபுரம் நகர் பகுதியினரும் மனிதச் சங்கிலியாக நின்றனர்.
ரிங்ரோடு முதல் அச்சம்பத்து வரை மதுரை மேற்கு ஒன்றியம், ஆனையூர் நகரம், விளாங்குடி, பரவை பேரூர், அச்சம்பத்து முதல் மதுரை மாநகராட்சி எல்லை வரை மேலூர் ஒன்றியம், நகரம், கொட்டாம்பட்டி ஒன்றியம், அ.வல்லாளபட்டி பேரூர் பகுதியினரும் மனிதச் சங்கிலியாக நின்றனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications