சிரிய கலவரத்தில் இதுவரை 5000 பேர் உயிரிழப்பு – ஐநா தகவல்
டமாஸ்கஸ்: சிரியாவில் அதிபருக்கு எதிராக நடைபெற்று வரும் கலவரத்தில் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
அதிபர் பஷார் அல்- அஸ்ஸாத் ஆட்சிக்கு எதிராக சிரியாவில் கடந்த 10 மாதங்களாக பொதுமக்கள் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவத்தை பயன்படுத்தி வருகிறார் அதிபர் அல்-ஆசாத். பொதுமக்களை ராணுவம் கொத்து கொத்தாக கொன்று குவித்து வருவதால் அங்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது.
5 ஆயிரம் பேர் உயிரிழப்பு
இந்த நிலையில் ராணுவம் சுட்டத்தில் இதுவரை 5 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பு தலைவர் நவி பில்லாய் தெரிவித்துள்ளார். கடந்த 10 நாட்களில் மட்டும் 1000-க் கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சிரியாவில் மனிதாபிமானத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே இது குறித்து சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் புகார் தெரிவிக்கப்படும் என்றும் நவி பில்லாய் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications