மலேசியாவிலிருந்து இருந்து சென்னைக்கு சுற்றுலா வந்த பயணி மாரடைப்பால் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மலேசியாவில் இருந்து சென்னைக்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர் சொந்த ஊருக்கு திரும்பி செல்லும் போது விமானநிலையத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கோலாலம்பூர் செல்லவிருந்த விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் ஏறி அமர்ந்த நிலையில் அந்த விமானத்திற்கு வரவேண்டிய சையத் அப்துல் ஜெலி என்பவரும் அவரது மனைவி சையத் இஷராணியும் ஆகிய இருவரும் விமானத்தில் ஏறாமல் இருந்தது தெரியவந்தது.

விமான நிலைய அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் தகவல் கொடுத்து தேடினர். அப்போது அங்கு வந்த சையத் இஷராணி தனது கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர் குழுவினர் சையத் அப்துல் ஜெலி மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை

இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடலை பிரேத அரசு மருத்துவ மனைக்கு பரிசோதனைக்காக போலீசார் எடுத்துச்சென்றனர். கோலாலம்பூரில் இருந்து சென்னையை சுற்றிப்பார்த்து விட்டு சொந்த ஊரான கோலாலம்பூருக்கு செல்வதற்கு விமானத்தில் ஏற இருந்த நிலையில் மாரடைப்பு எற்பட்டு மரணமடைந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

உடனடியாக அவரது சொந்த ஊருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இன்பச் சுற்றுலா வந்த இடத்தில் கணவனை பறிகொடுத்துவிட்டு இஷராணி கதறி அழுதது விமான நிலையத்தில் இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+