சென்னை டிசிஎஸ் பயிற்சி மைய வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- 5000 பேர் வெளியேற்றம்

சென்னை அம்பத்தூரில் ஆர்.ஆர். ஸ்கைலைன் என்ற 6 மாடி தகவல் தொழில்நுட்ப அலுவலக வளாகம் உள்ளது. இங்கு டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தின் பயிற்சி மையம் அமைந்துள்ளது. வேறு சில அலுவலகங்களும் இங்கு உள்ளன.
அதில் ஒரு நிறுவனத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசிஎஸ் மற்றும் பிற அலுவலகங்கள் மூடப்பட்டன. டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் 1000 பேர் உள்பட 5000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மேலும் அலுவலகங்கள் முழுவதிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய்கள் சகிதம் வெடிகுண்டு நிபுணர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதுகுறித்து டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,அம்பத்தூரில் டிசிஎஸ் நிறுவனம் அமைந்திருக்கும் வளாகத்தில் உள்ள ஒரு அலுவலகத்திற்கு இன்றுகாலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டன.
போலீஸாரும் சிறப்புப் படையினரும் அலுவலகம் முழுக்க சோதனை நடத்தினர். இந்த அலுவலகம், பயிற்சி மையம் என்பதால், டிசிஎஸ் நிறுவனத்தின் சென்னை அலுவலக பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications