சஸ்பெண்டான ஊழியரிடம் லஞ்சம் - மின் வாரிய நிர்வாக மேற்பார்வையாளர் உட்பட 2 பேர் கைது
கரூர்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட மின் வாரிய ஊழியரிடம் ரூ.5,000 லஞ்சம் கேட்ட மின் வாரிய நிர்வாக மேற்பார்வையாளர் உட்பட 2 பேரை, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் சரவணன்(40). இவர் குளித்தலை அடுத்த நச்சலூர் துணை மின் நிலையத்தில் மின் பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த பிப்ரவரியில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதனால் பிழைப்பு ஊதியம் கேட்டு, கடந்த 13ம் தேதி கரூர் மின் வாரிய நிர்வாக மேற்பார்வையாளர் தட்சிணாமூர்த்தி, கணக்கு மேற்பார்வையாளர் சரவணன் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்தார். அப்போது மாத பிழைப்பூதியம் வழங்க ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்க விரும்பாத சரவணன், இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி, மின் வாரிய அலுவலகத்திற்கு சென்றார். மின் வாரிய நிர்வாக மேற்பார்வையாளர் தட்சிணாமூர்த்தி கூறியப்படி, அவரது புரோக்கர் நரசிம்மன் என்பவரிடம் சரவணன் லஞ்சப் பணத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. அம்பிகாபதி தலைமையிலான போலீசார் தட்சிணாமூர்த்தி, புரோக்கர் நரசிம்மன் உள்ளிட்டோரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications