அத்வானி ரத யாத்திரையில் வெடி குண்டு - கைதான 2 பேரின் கோரிக்கை நிராகரிப்பு

பாஜக மூத்த தலைவர் அத்வானி ரத யாத்திரை செல்லும் வழியில் ஆலம்பட்டி அருகே பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி மதுரையை சேர்ந்த அப்துல்லா, இஸ்மத் உள்ளிட்டோரை கைது செய்தனர். கைதான 2 பேரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதன் இடையே அப்துல்லா வேலூர் சிறைக்கும், இஸ்மத் சேலம் சிறைக்கும் மாற்றப்பட்டனர். ஆனால் தங்களை மீண்டும் மதுரை சிறைக்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் சீமான் என்பவர் மூலம் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இதனால் நீதிமன்ற காவல் முடிந்து அப்துல்லா, இஸ்மத் உள்ளிட்ட 2 பேரும் திருமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது சிறை மாற்றம் செய்ய சிறைத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி அவர்களது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இருவருக்கும் வரும் 30ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து அப்துல்லா வேலூர் சிறைக்கும், இஸ்மத் சேலம் சிறைக்கும் பலத்த பாதுகாப்புடன் போலீசார் கொண்டு செல்லப்பட்டனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications