தர்மபுரி காகித தொழிற்சாலையி்ல் விஷவாயு தாக்கி 2 பேர் பலி
தர்மபுரி: தர்மபுரியில் உள்ள காகித தொழிற்சாலையில் பேப்பர் கூழ் தயாரிப்பு தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பரிதாபமாக பலியாகினர்.
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூரை அடுத்த கே.ஈச்சம்பாடியில் தனியாருக்கு சொந்தமான தர்மபுரி பேப்பர் மில்ஸ் என்ற தொழிற்சாலை உள்ளது. இங்கு காகித கூழ் தயாரிக்கும் தொட்டியை சுத்தம் செய்ய கதிரவன் என்பவர் ஏணி மூலம் உள்ளே இறங்கினார்.
ஆனால் வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனையடுத்து விஸ்வநாதன்(30) என்பவர் கதிரவனை தேடி தொட்டிற்குள் இறங்கினார்.
சிறிதுநேரத்தில் தொட்டிக்குள் இருந்து லேசான அலறல் சத்தம் கேட்டது. இதனையடுத்து அருகில் இருந்த மற்ற 3 தொழிலாளர்களும் தொட்டியில் இறங்கினர். இதில் தொட்டியில் இருந்த விஷவாயு தாக்கி 5 பேரும் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர்.
இதனை அறிந்த மற்ற தொழிலாளர்கள், தொட்டிக்குள் மயக்கமடைந்து கிடந்த 5 பேரையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இங்கு கதிரவன், விஸ்வநாதன் உள்ளிட்ட 2 பேரும் ஏற்கனவே இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் பிரசாந்த், குமரேசன், பழனி ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
காகித தொழிற்சாலைக்கு 5 நாட்களாக விடுமுறை விடப்பட்டு இருந்தால், காகித கூழ் தொட்டியில் விஷ வாயு உற்பத்தியாகி, 5 பேரும் மயக்கமடைந்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த ஆலைக்கு மாவட்ட உதவி கலெக்டர் மூலம் சீல் வைக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications