தமிழர்கள் தாக்கப்படுவததை கண்டித்து திருப்பூரில் மலையாளிகள் கடையடைப்பு
திருப்பூர்: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமாக கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து திருப்பூரில் உள்ள மலையாளிகள் இன்றும், நாளையும் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமாக கேரளாவில் உள்ள எஸ்டேட்களில் தங்கி வேலை பார்க்கும் தமிழர்களை மலையாளிகள் அடித்து விரட்டுகின்றனர். இதனால் உயிருக்கு பயந்து தமிழ்க் குடும்பங்கள் இரவோடு இரவாக தமிழகத்திற்கு தப்பியோடி வருகின்றன. இதுவரைக்கும் சுமார் 1,000க்கும் அதிகமான தமிழ்க் குடும்பங்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளன.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் செயல்பாட்டைக் கண்டித்தும், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் திருப்பூரில் உள்ள மலையாளிகள் இன்றும், நாளையும் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர்.
கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications