முல்லைப் பெரியாறுக்கு தேசிய பேரிடர் குழுவை அனுப்பும் மத்திய அரசு முடிவுக்கு ஜெ. கடும் கண்டனம்

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், விபத்து கால செயல்திட்டம் ஒன்றை வகுக்க, வல்லுனர்கள் குழு ஒன்றை அமைத்து கடந்த 12-ம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பிக்கபட்டுள்ளது.
அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் அமைத்த அதிகாரம் பெற்ற உயர்மட்ட குழு, அணையின் நிலை குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு மற்றும் நீர்ப் பிடிப்பு பகுதிகளுக்கான தற்காலிக செயல் திட்டம் ஒன்றை தயாரிக்க, வல்லுனர் குழுவை ஏற்படுத்தக் கோருவது சரியானதாகவும், நியாயமானதாகவும் இருக்க முடியாது.
எனவே அணை விவகாரத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தலையிடுவதை அனுமதிக்க முடியாது. இது கேரளாவின் நெருக்குதலுக்குப் பணியும் செயலாக கருதப்பட முடியுமே தவிர வேறு ஒன்றும் இல்லை.
உச்சநீதிமன்றக் குழுவைப் புறக்கணிக்க இதை கேரள அரசு பயன்படுத்திக் கொள்ளும். மேலும் அணை பாதுகாப்பாக இல்லை என்று உச்சநீதிமன்ற நிபுணர் குழுவுக்கே அழுத்தம் கொடுக்க கேரள அரசு நினைக்கிறது. உங்களது தலைமையில் உள்ள ஆணையம் இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த ஆணையத்தின் உத்தரவை திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications