சென்னை இந்தியாவின் ஐடி தலைநகராகும்: ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிக அளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் உள்ள சென்னை இந்தியாவின் சான் ஜோன்ஸ் நகராக உருமாறிக் கொண்டிருக்கிறது. சென்னை விரைவில் நாட்டின் தகவல் தொழி்ல்நுட்ப தலைநகரமாகும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் ‘கனெக்ட் 2011' தொழில்நுட்பக் கருத்தரங்கு நேற்று சென்னை வர்த்தக மையத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது,

தகவல் தொழில்நுட்பம் மற்றும் அயல்பணி ஒப்படைப்புத்துறை நம் நாட்டில் அதிவேகமாக வளர்ந்து வரும் துறைகளாக உள்ளன. ஆசிய-பசிபிக் நாடுகளில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது. நம் நாட்டில் 2011ம் நிதியாண்டில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அயல்பணி ஒப்படைப்புத்துறை மூலம் 88.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் கிடைத்துள்ளது. 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த 1998ம் ஆண்டு இந்திய ஏற்றுமதியில் இந்த துறைகளின் பங்கு வெறும் 4 சதவீதம் தான் இருந்தது. ஆனால் தற்போது அது 26 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு நாஸ்காம் சார்பில் வெளியிடப்பட்ட மெக்கென்ஸி அறிக்கையில், இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் மூலம் 175 பில்லியன் அமெரிக்க டாலர்களும், உள்நாட்டு வர்த்தகம் மூலம் 50 பில்லியன் அமெரிக்க டாலர்களும் என இரண்டும் சேர்த்து 225 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதிக அளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் உள்ள சென்னை இந்தியாவின் சான் ஜோன்ஸ் நகராக உருமாறிக் கொண்டிருக்கிறது. சென்னை விரைவில் நாட்டின் தகவல் தொழி்ல்நுட்ப தலைநகரமாகும்.

ஆண்டுக்கு 1.92 லட்சம் பொறியியல் மாணவர்களும், அதற்கு நிகராக பாலிடெக்னிக் மாணவர்களையும் சென்னை தயார் செய்கிறது. 500 பொறியியல் கல்லூரிகளைக் கொண்ட அண்ணா பல்கலைக்ழகம் உலகின் மிகப்பெரிய தொழிலுநுட்பக் கல்லூரியாகத் திகழ்கிறது. நாட்டின் பொறியாளர்களில் 25 சதவீதம் பேர், உலகப் பொறியாளர்களில் 10 சதவீதம் பேர் அண்ணா பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்படுகிறார்கள். இந்தியாவின் தொல்நுட்ப சக்தி வாய்ந்த மாநிலமாக தமிழகம் உள்ளது.

முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாகவும் தமிழகம் உள்ளது. தெற்காசிய நாடுகளையும் தாண்டி உலக நாடுகளுக்கே இந்தியாவின் கிழக்கு நுழைவாயிலாகத் தமிழகம் இருக்கும். தற்போது தமிழகத்தில் 120 பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட 1,800 மென்பொருள், தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். இந்த துறைக்கு மிகவும் அவசியமான தகவல் தொடர்பு கட்டமைப்புகளை தமிழகம் வழங்கி வருகிறது. மேலும் சென்னை சர்வதேச நிதி அமைப்புகளுக்கான மையமாகத் திகழ்கிறது.

அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முதல் மாநிலமாக்க கனவு காண்கிறேன். அதை நனவாக்க புதிய புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையை எனது அரசு உருவாக்கி வருகிறது. முதலீட்டார்களுக்கு ஏற்ற தொழில் கொள்கையை உருவாக்க முக்கியத்துவம் கொடுக்கிறோம். வலிமையான தமிழகத்தை உருவாக்க முதலீட்டாளர்களை நான் வரவேற்கிறேன் என்றார்.

இந்த கருத்தரங்கில் சிஐஐ கனெக்ட் 2011ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகள் 4 பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டன. சிறப்பாக இயங்கிய தமிழக நிறுவனம் என்னும் பிரிவில் கோவை கே.ஜி. இன்ஃபர்மேஷன்ஸ் சிஸ்டம் நிறுவன நிறுவனர் அசோக் பக்தவத்சலம், தமிழகத்தில் துவங்கி உலக அளவில் சிறப்பு பெற்றுள்ளமைக்காக பாரத் மேட்ரிமோனியல் நிறுவனர் முருகவேல் ஜானகிராம், தகவல் தொழில்நுட்பத் துறைக்கு முதுகெலும்பான மனித ஆற்றலில் பெரும் பங்களிப்பிற்காக மதுரை தியாகராஜர் கல்லூரி தாளாளர் கருமுத்து டி.கண்ணன், வாழ்நாள் சாதனையாளர் விருது டிசிஎஸ் துணைத் தலைவர் எஸ்.ராமதுரை ஆகியோருக்கு வழங்கப்பட்டன. இந்த விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

கருத்தரங்கில் கனெக்ட் 2011 தலைவர் எஸ்.மகாலிங்கம், பிரதமரின் ஆலோசகர் எஸ்.ராமதுரை ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். சிஐஐ தென்மண்டலத் தலைவர் டி.டி.அசோக் வரவேற்புரையாற்றினார். கனெக்ட் 2011 உதவி தலைவர் ஆர்.சந்திரசேகரன் நன்றியுரை கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+