10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 16ம் தேதி துவக்கம்
சென்னை: இந்த ஆண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 16ம் தேதி துவங்குகிறது என்று கூறப்படுகின்றது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வழக்கமாக மார்ச் கடைசி வாரத்தில் துவங்கும். இந்த ஆண்டு சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தினால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 16ம் தேதி துவங்குகிறது என்று கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவியர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இந்த ஆண்டு மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் உள்ளிட்ட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ரூ. 115 தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 16ம் தேதி துவங்கும் தேர்வு 27ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிகிறது.
சமச்சீர் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியும் பள்ளிகளுக்கு புத்தகங்கள் கிடைக்க தாமதமானது. இதனால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இதுவரை 75 சதவீத பாடங்கள் தான் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக டிசம்பர் மாதத்தில் 10ம் வகுப்பு பாடகங்கள் அனைத்தும் முடிக்கப்பட்டு ஜனவரி முதல் மார்ச் முதல் வாரம் வரை தேர்வுகளும், திருப்புதல் தேர்வுகளும் நடக்கும். இந்த ஆண்டு ஜனவரி மாதம் கடைசி வாரம் அல்லது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தான் பாடங்கள் முடிக்கப்படும் என்று தெரிகிறது.
சமச்சீர் பாடத்திட்டத்தின்படி இந்த ஆண்டு அனைத்து மாணவர்களும் அறிவியல் செய்முறைத் தேர்வு எழுத வேண்டும்.
செய்முறைத் தேர்வு நடத்தவும், செய்முறைத் தேர்வுக்கான பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கவும், திருப்புதல் தேர்வுகள் நடத்தவும் வசதியாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பரிந்துரைத்திருந்தனர். அவர்கள் பரிந்துரையை ஏற்று தேர்வு 3 வாரங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தேர்வு அட்டவணையை அரசு பரிசீலித்து வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிகிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications