மீண்டும் சென்னை கூடுதல் ஆணையரானார் தாமரைக்கண்ணன்- பல ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை: தமிழக காவல்துறையில் பல உயர் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். சென்னை காவல்துறை கூடுதல் ஆணையராக தாமரைக்கண்ணன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் அதிமுகவை விட்டு சசிகலா குடும்பத்தினர் கூண்டோடு நீக்கப்பட்டனர். இதையடுத்து அவரது ஆதரவு ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளின் பட்டியல் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. விரைவில் பெரும் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் உயர் போலீஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பின்படி, மாநில உளவுப்பிரிவு ஐ.ஜி. பி.தாமரைக்கண்ணன், சென்னை நகரின் சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இப்பதவியில்தான் நியமிக்கப்பட்டார். ஆனால் பின்னர் உளவுப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் கூடுதல் ஆணையராகியுள்ளார்.
கோவை போலீஸ் கமிஷனர் அம்ரேஷ் பூஜாரி, மாநில உளவுப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை நகரின் சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா, போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
சென்னை அமைச்சுப்பணி ஐ.ஜி. டி.பி.சுந்தரமூர்த்தி, கோவை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மனித உரிமை கமிஷனுக்கு டி.ராஜேந்திரன் மாற்றம்
மாநில தொழில்நுட்ப பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டி.ராஜேந்திரன், மாநில மனித உரிமை கமிஷன் கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. கே.பி.மகேந்திரன், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய கூடுதல் டி.ஜி.பி. எம்.கே.ஜா, மாநில தொழில்நுட்ப பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. ஆர்.சேகர், புதிதாக உருவாக்கப்பட்ட ரயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்பார்.
சென்னை நிர்வாக பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், மாநில லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை ஆயுதப்படை போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. நரேந்திரபால்சிங், சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்பார் என்று அரசு தெரிவித்துள்ளது.
விரைவில் மேலும் பலர் இடமாற்றம் செய்யப்படுவர் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications