தமிழக-கேரள எல்லையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
புளியரை: தமிழக கேரள எல்லையில் இன்று அதிகாலை முதல் மதியம் 12 மணி வரை சுமார் 5 மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் 13 வழித்தடங்களில் குமுளி, செங்கோட்டை புளியரை, நாகர்கோவில் ஆகிய பாதைகளில் வாகனப் போக்குவரத்து அதிகம் இருக்கும்.
தற்போது சபரிமலை சீசன் என்பதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சபரி்மலை நோக்கி சென்று வருகின்றன. கடந்த 10 நாட்களாக முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் பல பாதைகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இதனால் ஐயப்ப பக்தர்கள் வாகனம், காய்கறி வாகனங்கள், பிற சரக்கு வாகனங்கள் செங்கோட்டை-புளியரை வழியாக கேரளா நோக்கி செல்வதாலும், கேரளாவில் இருந்து ஏராளமான வாகனங்கள் தமிழகம் வருவதாலும் இப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் வணிக வரி, போக்குவரத்து துறையின் சோதனைச் சாவடிகளில் போதுமான பணியாளர்கள் இல்லாததாலும், கூடுதல் சிறப்பு கவுண்டர்கள் இல்லாத காரணத்தினாலும், சாலை நுழைவு வரி கட்ட கூட்ட நெரிசல் ஏற்படுவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். இன்று அதிகாலை முதல் மதியம் 12 மணி வரை சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் கேரள மாநிலம் எல்லை முதல் புளியரை வரை சுமார் 6 கிமீ தூரம் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் ஐயப்ப பக்தர்கள், திருவனந்தபுரம் விமான நிலையம் செல்பவர்கள், சரக்கு லாரி ஓட்டுபவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications