பிரதமர் வருகை- பாதுகாப்பு கருதி போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்- ஸ்தம்பித்தது சென்னை!
சென்னை: பிரதமர் மன்மோகன் சிங் வருகையின்போது அவரது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தி விட்டனர் சென்னை போலீஸார். இதனால் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கடும் பாதிப்பை மக்கள் சந்தித்தனர். கிட்டத்தட்ட சென்னை மாநகரின் போக்குவரத்தே ஸ்தம்பித்துப் போய் விட்டது.
பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு சென்னை வந்தார். ஆளுநர் மாளிகையில் தங்கிய அவர் இன்று காலை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த கணிதமேதை ராமானுஜர் 125வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்.
இதையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல்துறை செய்திருந்தது. அதன் ஒரு பகுதியாக போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தி விட்டனர்.
பாதுகாப்பு கருதி வாகனப் போக்குவரத்தை போலீஸார் முற்றிலும் நிறுத்தியதால் கிண்டி ராஜ்பவன் முதல் கடற்கரை காமராசர் சாலை முழுவதும் ஒரு வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக மயிலாப்பூர், கிண்டி, வேளச்சேரி, அண்ணா சாலை, அதன் பக்கவாட்டுச் சாலைகள், மீனம்பாக்கம், பல்லாவரம் வரை வாகனங்கள் ஆயிரக்கணக்கில் தேங்கி நின்றன.
எந்த வாகனமும் போக முடியாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் ஆம்புலன்ஸ்கள் கூட போக முடியாமல் திணறி விட்டன. அலுவலகளுக்குச் செல்ல கிளம்பியோர் வாகனங்கள் தேங்கிப் போனதால் பெரும் சிரமத்திற்குள்ளாகி விட்டனர்.
பிரதமர் வருகைக்காக இப்படியா போக்குவரத்தை முற்றிலும் நிறுத்துவது என்று மக்கள் குமுறித் தள்ளி விட்டனர்.
இருப்பினும் கருப்புக் கொடி போராட்ட அறிவிப்புகளால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. வாகனங்களிலிருந்தபடி குறிப்பாக மாநகர பஸ்களில் இருந்தபடி ஜன்னல் வழியாக யாரும் கருப்புக் கொடி காட்டி விடக் கூடாது என்பதற்காக இப்படிச் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications