முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டக் கூடாது: பிரதமரிடம் ஜெ. மனு
சென்னை: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டக் கூடாது என்று கேரள அரசை வலியுறுத்துமாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக் கொண்டார்.
நேற்றிரவு சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை ஆளுநர் மாளிகையில் வைத்து முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. அப்போது அவர் முல்லைப் பெரியாறு விவகாரம் உள்பட பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி பிரதமரிடம் 16 பக்கங்கள் கொண்ட மனுவை கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
142 அடி நீரைத் தேக்க உத்தரவிட வேண்டும்
உச்ச நீதிமன்றம் 27.2.2006ல் அளித்த தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்க கேரள அரசு ஒப்புக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.
புதுப்பிக்கப்பட்ட அணையானது பாதுகாப்பானதாக இருப்பதால், புதிய அணை கட்டும் எந்த முயற்சியிலும் ஈடுபடக் கூடாது என கேரள அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
கேரளா இடையூறு செய்யக் கூடாது
மத்திய நீர்வள ஆணையம் பரிந்துரைத்துள்ளபடி மீதியுள்ள பலப்படுத்தும் பணிகளுக்கும், வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்கும் கேரள அரசு இடையூறு ஏதும் செய்யாமல் இருப்பதுடன், அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அறிவுரை கூற வேண்டும். இந்த அணைக்காக தமிழகத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றவும் கேரள அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.
மத்திய பாதுகாப்புப் படையை நிறுத்துக
முல்லைப் பெரியாறு அணை மற்றும் குத்தகைக்கு வழங்கிய இடத்தில் அத்துடன் இணைந்துள்ள கட்டுமானங்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை ஈடுபடுத்த வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் ஆபத்து நேரிட்டால் மேற்கொள்ள வேண்டிய பணிகளைத் திட்டமிட நிபுணர் குழுவை அமைக்க பிறப்பித்த அறிவிப்பாணையை வாபஸ் பெற வேண்டும்.
மீனவர் தாக்குதலை தேசியப் பிரச்சினையாக கருதுக
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் அல்லது விஷமிகள் தாக்குவதை தேசிய பிரச்சனையாகக் கருத வேண்டும் என்று ஏற்கெனவே வலியுறுத்தியிருக்கிறேன். இந்தியாவுக்கு எதிரான தாக்குதலாக இதைக் கருத வேண்டும் என குறிப்பிட்டுள்ளேன்.
2012 ஜனவரியில் இலங்கையுடன் பேச்சு நடக்கும்போது, இது குறித்து இலங்கை அரசுடன் இந்திய அரசு கடுமையாகப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
பாக் நீரிணைப் பகுதியில் பாரம்பரியமாக உள்ள மீன்பிடி உரிமையைப் பாதுகாக்கவும், மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கவும் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications