தணியாத பதற்றம்: தேனியில் இருந்து கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து மீண்டும் நிறுத்தம்
கம்பம்: தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதிகளில் பதற்றம் தணியாத காரணத்தினால் தேனி மாவட்டத்தில் இருந்து கம்பம்மெட்டு வழியாக கேரளத்துக்கு திங்கள்கிழமை தொடங்கப்பட்ட பஸ் போக்குவரத்து, செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை முன்னிட்டு தமிழக - கேரள எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தால், உத்தமபாளையம் வட்டாரத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இரு மாநில எல்லைப் பகுதிகளிலும் பேருந்துகள், வாகனங்கள் தாக்கப்பட்டன. இதனையொட்டி டிசம்பர் 5-ம் தேதி முதல் தேனி மாவட்டத்தில் இருந்து குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய பாதைகள் வழியாக பேருந்து மற்றும் சரக்கு வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேபோல, கேரள அரசு பேருந்துகளும், தமிழகப் பகுதிக்கு இயக்கப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி லோயர்கேம்ப், கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் உள்ள தமிழக எல்லை வரை காவல் துறை பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. தொடர்ந்து, திங்கள்கிழமை கம்பம்மெட்டு சாலை வழியாக கேரளத்தில் உள்ள நெடுங்கண்டம், கட்டப்பனை ஆகிய இடங்களுக்கு தமிழக அரசு பஸ் இயக்கப்பட்டது.
போராட்டகுழு முற்றுகை
காவல் துறையின் பாதுகாப்புடன் சென்ற பேருந்தை நெடுங்கண்டம் அருகே கருணாபுரம் என்ற இடத்தில் கேரளப் போராட்டக் குழுவினர் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதேபோல்
கம்பம் அருகே புதுப்பட்டியில் இருந்து கிருஷ்ணமூர்த்தி மகன் முத்துச்செல்வம் (23) என்பவர் தனியார் ஜீப் மூலம் கேரளப் பகுதிக்கு திங்கள்கிழமை சென்றார். இடுக்கி மாவட்டம், கல்தொட்டி பகுதியில் உள்ள தனது ஏலத்தோட்டத்துக்குச் சென்ற அவரை, போராட்டக்காரர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மீண்டும் நிறுத்தம்
இதற்கிடையே எல்லைப் பகுதியில் பதற்றம் தணியாத நிலையில் கேரளத்துக்கு பஸ் இயக்குவதை நிறுத்த வேண்டும் என்று உத்தமபாளையம் வழக்குரைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து தேனி மாவட்டத்தில் இருந்து கம்பம்மெட்டு வழியாக கேரளத்துக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
எனினும், லோயர்கேம்ப், போடிமெட்டு ஆகிய பாதைகள் வழியாக தமிழக எல்லை வரை அரசு பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.
ஜனவரி 2-ம் தேதிக்குப் பின்னர் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு பஸ் போக்குவரத்து தொடங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications