அம்பாசமுத்திரம் தாசில்தார் மர்மச்சாவு
மதுரை: நெல்லை அருகே தாசில்தார் மர்மமான முறையில் இறந்து குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வி, பொதுச் செயலாளர் இரா.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்ட தாசில்தாராக பணியாற்றிய எஸ்.தியாகராஜன், டிசம்பர் 24ம் தேதி தச்சநல்லூர் அழகநேரி கிராமம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடைந்தார். அரசுப் பணியில் உயர் அலுவலர்களால் ஏற்படுத்தப்பட்ட கடும் நெருக்கடி காரணமாக உருவான மன உளைச்சலால் அவரது மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகின்றது.
அரசு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களால் ஏற்பட்டுள்ள பணிச்சுமை காரணமாக ஒட்டு மொத்த அரசு ஊழியர்களும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஏற்கனவே உள்ள பணிச் சுமையோடு அரசு அறிவிக்கும் புதிய திட்டங்களால் மேலும், பணி சுமை அதிகரிக்கின்றது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
எனவே அகால மரணமடைந்த தாசில்தார் எஸ்.தியாகராஜன் மரணம் குறித்து உடனே தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும், அரசுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications