ஈரோடு, கோவை திருவாரூர் அதிமுக நிர்வாகிகள் நீக்கம் - அதிமுக அதிரடி
மதுரை: கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக ஈரோடு, கோவை, திருவாரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளை அக்கட்சி தலைமை நீக்கி உள்ளது.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கட்சியின் கொள்கை, குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்பட்டு உள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மன்னார்குடி ஒன்றியச் செயலாளர் க.அசோகன், மன்னார்குடி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு.சீனிவாசன், மன்னார்குடி சிவா. ராஜமாணிக்கம், சி.ஆர்.சி. ஆசைத்தம்பி, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த காசிபாளையம் நகர ஜெ ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் எஸ்.கே.மோகன், கோவை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவை தமிழ்மணி கோவை விஜயகுமார், பாரதி நகர், கோவை லியோ (எ) விமல் ஆதித்தன் உள்ளிட்டோரை கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர்.
மற்ற கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications