ஹசாரே பிரச்சாரத்துக்கு வர மாட்டார்: கவலையில் பாஜக, நிம்மதியில் காங்!

வலுவான லோக்பால் மசோதா கோரி ஹசாரே 2 முறை உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் அவரது கோரிக்கைகளை மத்திய அரசும் எதிர்க் கட்சிகளும் சேர்ந்து முடக்கிவிட்டன. ஒருவரை ஒருவர் குறை கூறியபடி, பலமில்லாத லோக்பால் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவில் அது கூட நடக்கவில்லை. மசோதா மீது விவாதம் நடந்து கொண்டிருந்தபோதே கூட்டத் தொடர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, மசோதா கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந் நிலையில் நாங்கள் கோரியபடி லோக்பால் மசோதா கொண்டு வரப்பட வேண்டும் என்று கோரி ஹசாரே மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். வழக்கமாக டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கும் அவர், இந்த முறை அங்கு குளிர் அதிகமாக இருந்ததால், மக்கள் வர மாட்டார்கள் என்று அஞ்சி மும்பைக்கு உண்ணாவிரதத்தை மாற்றினார்.
ஆனால், மும்பையிலும் அவரது உண்ணாவிரதத்துக்கு கூட்டமே வரவில்லை. வெறும் 3,000 மட்டுமே கூட, காலியான மைதானத்தைப் பார்த்து வெறுத்துப் போன ஹசாரே உண்ணாவிரதத்தை பாதியிலேயே கைவிட்டுவிட்டு கிளம்பிப் போனார்.
இதையடுத்து உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்யப் போவதாக ஹசாரே அறிவித்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. காய்ச்சல், சளித் தொல்லையால் அவதிப்பட்ட அவருக்கு மார்பில் தொற்று ஏற்பட்டது. சனிக்கிழமை இரவு அவர் மார்பில் வலிப்பதாக கூறியதால் புனேயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்னா ஹசாரே இன்னும் 5 நாட்களில் உடல்நலம் தேறிவிடுவார் என்று டாக்டர்கள் அறிவித்துள்ளனர். அதன் பிறகும் அவர் ஒரு மாதம் வரை ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந் நிலையில் அன்னா ஹசாரே குழுவினர் கூடி நேற்று ஆலோசனை நடத்தினார்கள். அவர்கள் 5 மாநில தேர்தலில் ஹசாரேவை பிரச்சாரத்தில் ஈடுபடுத்த வேண்டாம் என்று தீர்மானித்துள்ளனர். எனவே 5 மாநில தேர்தல்களில் ஹசாரே பிரசாரம் செய்ய மாட்டார் என்று தெரிகிறது.
ஹசாரே பிரச்சாரம் செய்யாத நிலையில் அவரது குழுவினரைச் சேர்ந்தவர்களான அரவிந்த் கெஜரிவால், கிரண் பேடி ஆகியோர் பிரச்சாரம் செய்யலாம் என்று தெரிகிறது. ஆனால், இவர்களுக்கு மக்களிடையே பெரிய அளவில் ஆதரவு இல்லை என்பதால் இவர்களது பிரச்சாரம் எந்த அளவுக்கு எடுபடும் என்பது தெரியவில்லை.
இந்த மாநிலங்களில் ஹசாரேவின் பிரச்சாரத்தை வைத்து கரை சேர்ந்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த பாஜக பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications