யுகேஜி சிறுமிக்கு ஆசிரியைகள் பாலியல் தொல்லை- பரிசோதனை அறிக்கை முரண்பாடு: மருத்துவர்கள் பதில் மனு தாக
சென்னை: யுகேஜி மாணவிக்கு ஆசிரியைகள் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சமர்பிக்கப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வேறுபடுவதால் அந்த மருத்துவர்கள் தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் தான் 4 வயது ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஷாலினி அப்பகுதியில் உள்ள புகழ் பெற்ற ஏகேடி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி படித்து வந்தாள்.
இந்த நிலையில்தான் கடந்த ஜூலை மாதம் பள்ளியின் தலைமை ஆசிரியை லசி போஸ்கோ மற்றும் எல்கேஜி ஆசிரியை போர்ஷியா ஆகியோர் சிறுமியிடம் தகாதமுறையில் நடந்து கொண்டனர்.
இந்த அக்கிரமத்தைச் செய்த இருவரும், சிறுமியை மிரட்டியும் வைத்திருந்தனர். நடந்ததை யாரிடமாவது கூறினால் பாம்பு அடைக்கப்பட்ட இருட்டு அறையில் வைத்து உன்னைப் பூட்டி விடுவோம் என இவர்கள் மிரட்டியுள்ளனராம்.
ஆனால் ஆசிரியைகளின் அத்துமீறல் அதிகரித்துக் கொண்டே போன நிலையில் தனது மழலை மாறாத குரலில் பெற்றோரிடம் அதைக் கூறியபோது சுரேஷ் தம்பதியினர் அதிர்ச்சியில் நிலை குலைந்து போய் விட்டனர்.
இது குறித்து அச்சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசராணை கோரி மனித உரிமை ஆர்வலர் ராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது பேசிய நீதிபதி இக்பால் கூறியாதவது,
சிறுமியை பரிசோதித்த கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் கொடுத்துள்ள அறிக்கை முரண்பாடாக உள்ளது. எனவே, அந்த மருத்துவர்கள் தனித்தனியாக பதில் மனு (பிரமாண வாக்குமூல பத்திரம்) தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து வழ்ககு விசாரணை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications