பூகம்பம் ஏற்பட்டதாக புயல் தாக்கிய கடலூர், விழுப்புரம், புதுவையில் வதந்தி- மக்கள் பீதி
கடலூர்: தானே புயலின் பாதிப்பிலிருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வரும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பூகம்பம் ஏற்பட்டதாக திடீரென வதந்தி பரவியதால் மக்கள் நேற்று இரவு முழுவதும் தூங்காமல் சாலைகளில் கழிக்கும் நிலை ஏற்பட்டது.
தானே புயலால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுவை சீரழிந்து போயுள்ளது. இங்கு இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வடலூர் அருகே ஆபத்தானரனபுரம் என்ற கிராமத்தில் பூகம்பம் உணரப்பட்டதாக ஒரு தகவல் பரவியது. இதையடுதது கடலூர், பண்ருட்டி, கள்ளக்குறிச்சி, உளுந்தூர்ப்பேட்டை, வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவைப் பகுதிகளில் மக்கள் பீதியடைந்தனர்.
இதையடுத்து இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இரவு முழுவதும் தூங்க முடியாமல் சாலைகளில் கழிக்கும் நிலை ஏற்பட்டது.
ஆனால் பூகம்பம் எதுவும் ஏற்படவில்லை. எனவே மக்கள்பயப்பட வேண்டாம் என்று மூன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விளக்கியுள்ளனர். இதையடுத்து மக்களின் பீதி அகன்றது.












Click it and Unblock the Notifications