புயல் பாதித்த புதுவைக்கு இன்று போகிறார் ப.சிதம்பரம்- கடலூருக்கு நாளைதான்!
சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட கடலூருக்கு நாளைதான் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று புதுவையையும், காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளையும் அவர் பார்வையிடவுள்ளார். நாளை கடலூர் மற்றும் காரைக்காலைப் பார்வையிடவுள்ளார்.
தானே புயலால் புதுவை, கடலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. நாகை, காஞ்சிபுரம், சென்னை மாவட்டப் பகுதிகளிலும் கணிசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் புதுவை வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. இந்த நிலையில் இன்று சென்னை வந்தார் ப.சிதம்பரம்.
காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்குச் சென்ற அவர் மாநில காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனை சந்தித்துப் பேசினார். மேலும் தொண்டர்களிடம் மனுவும் பெற்றார்.
பின்னர் செய்தியாளர்கள் அவரைச் சந்தித்தனர். அப்போது ப.சிதம்பரம் கூறுகையில், தானே புயலால் பாதிக்கப்பட்ட புதுவை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளை இன்று பார்வையிடுகிறேன்.
கடலூர் மற்றும் காரைக்காலுக்கு நாளை செல்லவுள்ளேன் என்றும் கூறினார் ப.சிதம்பரம். வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications