ஈரான் மீது மேலும் பொருளாதார தடைகள் விதித்தது யுஎஸ்; அணு உலைகளை அழிப்போம் என மிரட்டல்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ஈரான் அணு குண்டு தயாரிக்காமல் தடுப்பேன் என்று
அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள ரிக் சான்டோரும் கூறியுள்ளார்.

பென்சில்வேனியாவைச் சேர்ந்த முன்னாள் செனட்டரான இவர் வரும் தேர்தலில் அதிபர் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார்.

என்பிஎஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், நான் அதிபரானால் ஈரான் நாட்டு அணு உலைகளை சர்வதேச பார்வையாளர்கள் பார்வையிட உத்தரவிடுவேன். இதை ஈரான் ஏற்க மறுத்தால், அணு உலைகள் மீது நிச்சயம் விமான, ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அழிப்பேன்.

மொத்தத்தில் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்காமல் தடுப்பேன் என்றார்.

இதற்கிடையே, யுரேனியத்தை போதுமான அளவுக்கு சுத்திகரிப்பு செய்துவிட்டதாகவும், அதிலிருந்து அணு உலைக்குத் தேவையான முதல் எரிபொருளை (nuclear fuel rod) தயாரித்து விட்டதாகவும் ஈரான் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல குறுகிய தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணையையும் ஈரான் நேற்று வெற்றிகரமாகப் பரிசோதித்தது. இந்த அணு எரிபொருள், ஏவுகணை இரண்டையுமே உள்நாட்டு தொழில்நுட்பம் மூலமே தயாரித்து ஈரான் சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஈரான் மீது மேலும் பொருளாதாரத் தடை-ஒபாமா:

இந் நிலையில் ஈரான் மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்கக் கூடிய, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளிக்கும் நிதியுதவியை குறைக்கக் கூடிய பாதுகாப்பு மசோதாவில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார். எனினும், இம்மசோதாவின் சில பிரிவுகள் குறித்து, அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஈரான் மீது மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதிக்கும் பாதுகாப்பு மசோதா அமெரிக்க காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவின்படி அமெரிக்காவின் அரசு மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும், ஈரான் மத்திய வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களுடன் எவ்வித உறவும் வைத்து கொள்ளக் கூடாது. மீறி உறவு கொள்ளும் வங்கிகள், அமெரிக்க பங்குச் சந்தையிலிருந்து விலக்கி வைக்கப்படும்.

ஈரான் தனது தொலை தூரம் சென்று தாக்கும் ஏவுகணைப் பரிசோதனையை நிறுத்தி வைப்பதாகவும், அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் தயார் எனவும் அறிக்கை வெளியிட்டதற்கு சில மணி நேரங்கள் கழித்து, ஒபாமா இந்த மசோதாவில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், பயங்கரவாதத்துக்கெதிரான போருக்கா பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும், 850
மில்லியன் டாலர் நிதியுதவியில், 60 சதவீதத்தை நிறுத்தி வைக்கும் இன்னொரு மசோதாவிலும் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் இந்த இரு மசோதாக்களும் சட்டமாகிவிட்டன.

ஈரான் தனது தொலை தூரம் சென்று தாக்கும் ஏவுகணைப் பரிசோதனையை நிறுத்தி வைப்பதாகவும், அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் தயார் எனவும் அறிக்கை வெளியிட்டதற்கு சில மணி நேரங்கள் கழித்து, ஒபாமா இந்த மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார்.

அதேநேரம், குவான்டனாமோ பே சிறையில் உள்ள வெளிநாட்டுக் கைதிகளை, விசாரணைக்காக அமெரிக்காவிற்கோ அல்லது உடல்நலம் காரணமாக அவரவரின் நாடுகளுக்கோ அனுப்பி வைப்பதில், இந்த மசோதா சில கெடுபிடிகளை விதித்துள்ளது. இதை ஒபாமா ஏற்கவில்லை.

அதே போல உலகளவில் பொருளாதார சிக்கல்கள் நிலவி வரும் நிலையில், ஈரான் மீதான புதிய பொருளாதாரத் தடைகள் சர்வதேச அளவில் பெட்ரோலிய எண்ணெய் வர்த்தகத்தில் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றும் ஒபாமா கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், இந்த மசோதாவில் நான் கையெழுத்திட்டுவிட்டேன் என்பதற்காக, அதில் கூறப்பட்டுள்ள எல்லா அம்சங்களையும் ஏற்றுக் கொண்டேன் என்று அர்த்தமல்ல என்றார்.

ஈரான் இன்று மீண்டும் ஏவுகணை சோதனை:

இந் நிலையில் ஈரான் திங்களன்று ஹோர்முஸ் ஜலசந்தியில் இன்று மீண்டும் இரு ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தியது.

தன் மீது மேலும் பொருளாதார தடைகளை விதித்தால், வளைகுடாவின் நுழைவாயிலில் முக்கிய எண்ணெய் போக்குவரத்து சேனலான ஹோர்முஸ் ஜலசந்தியை மூடி, ஐரோப்பா, அமெரிக்காவுக்கு கப்பல்கள் மூலம் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் செல்வதை தடுப்போம் என ஈரான் அச்சுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+