காஞ்சியில் கந்துவட்டி பெண் கொடூரமாக வெட்டிக்கொலை: 2 பேருக்கு வலைவீச்சு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வந்த பெண்ணை 2 பேர் வீடுபுகுந்து வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் தென்கரைக்குளம் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (55). அவரது கணவர் ராமகிருஷ்ணன். கணவரைப் பிரிந்த லட்சுமி அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். துவக்கத்தில் விறகு வியாபாரம் செய்த அவர் பிறகு கந்து வட்டிக்கு பணம் கொடுக்க ஆரம்பித்தார்.
இதில் அவருக்கு பணம் பலபக்கத்தில் இருந்து வந்து கொட்டியது. இதையடுத்து அவர் தான் வசித்த பகுதியிலேயே 3 வீடுகளும், வெள்ள கேட் பகுதியில் 1 வீடும் வாங்கினார். நேற்று மாலை லட்சுமி வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் கண் இமைக்கும் நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து லட்சுமியை சரமாரியாக வெட்டிச்சாய்த்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதற்கிடையே லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அப்போது அவர் தலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி.ராஜேந்திரன் மற்றும் சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சொத்து பிரச்சனையில் தான் இந்த கொலை நடந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கொலையாளிகள் யார் என்றும் போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். இந்நிலையில் போலீசில் சிக்காமல் நீதிமன்றத்தில் சரணடைய கொலையாளிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதற்கு முன்பு அவர்களை கைது செய்ய போலீசார் விரைந்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications