அறுந்து விழுந்தது மின் கம்பி- நேற்று முதலில் இருளில் மூழ்கியிருக்கும் ராமேஸ்வரம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் முதல் ராமேஸ்வரம் தீவில் மின் விநியோகம் முற்றிலு்ம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து ராமேஸ்வரம் முழுவதும் மின்சாரம் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மண்டபம் பகுதியில் நேற்று ராமேஸ்வரம் தீவுக்கு மின்சாரம் கொண்டு செல்லும் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் நேற்று பிற்பகலில் ராமேஸ்வரத்துக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

அறுந்து கிடக்கும் மின் கம்பியை சரி செய்யும் பணி இன்னும் முடியவில்லை. இதனால் நேற்று பிற்பகலிலிருந்து ராமேஸ்வரத்திற்கு மின் விநியோகம் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடக்கிறது.

எப்போது மின் கம்பி சரி செய்யப்படும், மின்விநியோகம் தொடங்கும் என்று தெரியவில்லை. மின்சாரம் இல்லாததால் ராமேஸ்வரத்தில் பல்வேறு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் மக்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+