கடலூரில் நாளை இலவசமாக 2,000 லி. பால் வினியோகம்
கடலூர்: தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கத்தின் சார்பில் நாளை புயல் பாதித்த கடலூரில் 2,000 லிட்டர் பால் இலவசமாக விநியோகம் செய்யப்படுகிறது.
இது குறித்து அச்சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ஏ.பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடலூரில் தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் பொருட்டு, எங்களது சங்கம் சார்பில் 2,000 லிட்டர் பால் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம். 6-1-2012 அன்று (இன்று) இரவு 10.30 மணியளவில், சென்னை திருமங்கலம் காவல் நிலையம் அருகில் இருந்து நிவாரணப் பொருட்களுடன் கடலூர் நோக்கி புறப்படுகிறோம்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் மாநில தலைவர் சவுந்தர்முருகன், அம்பத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் வி. அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
கடலூரில் 7-1-2012 அன்று (நாளை) தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்துடன் இணைந்து, அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஜெயச்சந்திரன் முன்னிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக பால் விநியோகம் செய்ய இருக்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications