2 ஜி ஊழல் : சிதம்பரத்திற்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்தார் சு சாமி!
Subscribe to Oneindia Tamil

ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவுடன் ப. சிதம்பரம் இணைந்து செயல்பட்டதாக சுப்ரமணியன் சுவாமி குற்றம் சாட்டி வருகிறார். மேலும் ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக கடந்த மாதம் சிபிஐ நீதிமன்றத்தில் சுப்ரமணிய சுவாமி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதி சைனி, ஜனவரி 7-ந் தேதி வரை ஒத்தி வைத்தார். இதையடுத்து இவ்வழக்கில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது சுப்ரமணியசுவாமி ப.சிதம்பரத்திற்கு தொடர்புடைய ஆதரங்களை நீதிபதியிடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து நீதிபதி வழக்கு விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications