யானை மற்றும் மாயாவதி சிலைகளை துணியால் மூடுங்க!– உபி அரசுக்கு தேர்தல்ஆணையம் 'ஷாக்'!!
Subscribe to Oneindia Tamil

உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முறைகேடுகளை தடுக்க, தலைமை தேர்தல் கமிஷன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த நிலையில் உத்தர பிரதேசம் மாநிலம் முழுவதும் உள்ள மாயாவதி சிலைகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சிலைகளை அகற்ற வேண்டும் என்று புகார்கள் எழுந்தன. இதையடுத்து இந்த யானை சிலைகளையும், மாயாவதி உருவச்சிலைகளையும் மூட தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு முதலமைச்சர் மாயவதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏனெனில் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க இந்த சிலைகளையே மாயவதி அதிகம் நம்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications