தமிழகத்தில் நேற்று இரவு 19 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு திடீர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நேற்று இரவு 19 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். இது குறித்த உத்தரவை தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஷ்ரா வெளியிட்டார்.

இது குறித்த தமிழக அரசின் உத்தரவில் கூறியிருப்பதாவது,

1. சென்னை தலைமையக கூடுதல் டி.ஜி.பி. சஞ்சீவ்குமார், நிர்வாகப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

2.மாநில மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி கூடுதல் டி.ஜி.பி. ஸ்ரீலட்சுமி பிரசாத், தலைமையக கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

3.கூடுதல் டி.ஜி.பி. டி.ராதாகிருஷ்ணன், மாநில மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்க உள்ளார். இவர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

4. மதுரை சரக டி.ஐ.ஜி. கே.என்.சத்தியமூர்த்தி, சென்னை தலைமையக இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

5.சென்னை மனித உரிமைகள் மற்றும் சமூகநீதி டி.ஐ.ஜி. பாலநாகதேவி, மதுரை சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுளளார்.

6.சென்னை ஆயுதப்படை டி.ஐ.ஜி. வி.ஏ.ரவிக்குமார், சென்னை தெற்கு போக்குவரத்து இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7.திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி. எம்.ராமசுப்பிரமணி, ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

8.ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல், சென்னை ஆயுதப் படை டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

9.காத்திருப்போர் பட்டியில் இருந்த டி.ஐ.ஜி.சஞ்சய்குமார், சேலம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. திருச்சி ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஏ.ஜி.பாபு, சேலம் மாநகர சட்டம்- ஒழுங்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

11.சேலம் மாநகர சட்டம்-ஒழங்கு துணை கமிஷனர் எம்.சத்யபிரியா, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

12.கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.நாகராஜன், சென்னை போலீஸ் அகாடமிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

13.சென்னை மேற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் சந்தோஷ் குமார், கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

14.சென்னை போலீஸ் அகாடமி சூப்பிரண்டு சேவியர் தன்ராஜ், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்க உள்ளார்.

15.திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.அண்ணாதுரை, மதுரை அமலாக்கப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

16.மதுரை அமலாக்கப் பிரிவு சூப்பிரண்டு ஆசியம்மாள், சென்னை சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

17.கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.லட்சுமி, சென்னை மாதவரம் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுளளார்.

18.நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், கன்னியாகுமரி மாவட்ட சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

19.சென்னை மாதவரம் துணை கமிஷனர் எஸ்.ராஜேந்திரன், சென்னை கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+