எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் – சமையல் எரிவாயு சப்ளை பாதிக்கும்
நாமக்கல் : புதிய வாடகை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, ஜனவரி 12ஆம் தேதி நள்ளிரவு முதல் எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவுத்துள்ளன. இந்த வேலைநிறுத்தம் காரணமாக எரிவாயு சிலிண்டர்கள் சப்ளை பாதிக்கப்படும் என தெரிகிறது.
ஒப்பந்தப்படி புதிய லாரிகளுக்கு பணி ஆணை வழங்கவேண்டும், கடந்த ஆண்டு போடப்பட்ட புதிய வாடகை ஒப்பந்தத்தை எண்ணெய் நிறுவனங்கள் நிறைவேற்ற வேண்டும் என்பது எரிவாயு லாரி உரிமையாளர்களின் கோரிக்கை. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 12 ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என டேங்கர் லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். வெள்ளிக்கிழமையன்று நாமக்கல் நகரில் நடைபெற்ற அவசரக்கூட்டத்தில் எரிவாயு லாரி உரிமையாளர்கள் இதனை தீர்மானித்துள்ளனர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் அதிகமான லாரிகள் பங்கேற்கின்றன.
எரிவாயு தட்டுப்பாடு அபாயம்
12ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போரட்டம் நடைபெறும் பட்சத்தில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும் எனவும் லாரி உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications